தேங்காய் விளைச்சல் அதிகரிப்பு விலை குறைந்ததால் கவலை
கரூர்:தமிழகத்தில் தேங்காய் சாகுபடியில், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்கள் முன்னணியில் உள்-ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருவமழை சராசரி அள-வுக்கு பெய்ததால், தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே-சமயம், தேங்காய்க்கு கடந்தாண்டை விட, நடப்பாண்டு குறைந்-தளவே விலை கிடைக்கிறது.இதுகுறித்து, தென்னை விவசாயிகள் கூறியதாவது: தமிழகத்தில், தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேசமயம் வெளி மாநி-லங்களிலும், தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், வெளிமாநிலங்களுக்கு இங்கிருந்து அனுப்ப முடியவில்லை. இங்கு தேங்காய் தேக்கம் அடைந்து, விலை குறைந்துள்ளது.கடந்தாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில், முதல் தரம் ஒரு தேங்காய், மொத்த விலையில், 18 முதல், 22 ரூபாய் வரை விற்-பனையானது. தற்போது, 15 முதல், 18 ரூபாய்தான் கிடைக்கிறது. இது தென்னை விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை, நீடிக்கும் பட்சத்தில் தேங்காய்க்கு மேலும் விலை குறையும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது: கர்நாடகா மாநிலத்தில், தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் தமி-ழகத்தில் இருந்து, கர்நாடகா மாநிலத்துக்கு தேங்காய்களை அனுப்புவது குறைந்துள்ளது. மேலும், தமிழகத்தில் விளைச்சல் அதிகரித்ததாலும், தேங்காய் விலை குறைந்து வருகிறது. எனவே ரேஷன் கடைகளில், பாமாயில் சப்ளையை குறைத்து, தேங்காய் எண்ணெய் விற்பனை செய்தால், விவசாயிகளுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.