உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூட கட்டுமான பணி மும்முரம்

கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சி கூட கட்டுமான பணி மும்முரம்

கரூர், ------மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 61.60 லட்சம் ரூபாய் மதிப்பில் உடற்பயிற்சி கூடத்தின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஹாக்கி, கால்பந்து, கூடைப்பந்து, தடகளம் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அகில இந்திய அளவில் பங்கேற்கும் வகையில் வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்காக, மைதானத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில், விளையாட்டு வீரர்களின் உடல்திறனை அதிகப்படுத்தும் வகையில் ஏ.சி., வசதியுடன் உடற்பயிற்சி கூடம், 61.60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. கட்டுமான பணிகள் முடிந்த பின், நவீன உடற்பயிற்சி சாதனங்களும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்த உடன், பொதுமக்கள் பயன்பாட்டு திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ