மேலும் செய்திகள்
உரத்தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்
15-Jun-2026
கரூர்:வறட்சியை தாங்கும் திறன் இருப்பதால், சோளம் சாகுபடி தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.சிறு தானிய உணவுகளை உட்கொள்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் வலுப்பெறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என, மருத்துவம் கூறுகிறது. இதில், சோளம் நீரிழிவு நோய், செரிமான குறைபாடுகள், ரத்த சோகையில் இருந்து நம்மை காக்கிறது. நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கால்சியம், புரதம், கொழுப்பு, நியாசின் சத்துகள் உள்ளன. இது சர்க்கரையை குறைக்கும் தன்மையை கொண்டது. ராகி, கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, பனி வரகு ஆகியவற்றை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் சோளம் மட்டுமே பிரதானமாக பயிரிடப்படுகிறது.வறட்சியை தாங்கும் திறன் மற்றும் குறைந்த நீர்த்தேவை கொண்ட சோளம், விவசாயத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தணிப்பதில், மிக முக்கிய பங்கை வகிக்கிறது. இது எதிர்கால உணவு உற்பத்திக்கு மிகவும் நிலையான தானியமாக இருக்கும். இதில், 2018-19ம் ஆண்டில், 48 ஆயிரத்து, 756 ஏக்கர் பயிரிடப்பட்டு வந்த நிலையில், 2025-26ம் ஆண்டில், 53 ஆயிரத்து, 572 ஏக்கராக உயர்ந்துள்ளது. மேலும், சோளம் பயிரிடுவதன் வாயிலாக சோளத்தட்டு கிடைப்பதுடன், கால்நடைகளுக்கு தேவையான தீவனமும் கிடைக்கிறது என்பதால், சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
15-Jun-2026