உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குடிநீர் குழாயில் விரிசல் வீணாகும் தண்ணீர்

குடிநீர் குழாயில் விரிசல் வீணாகும் தண்ணீர்

கிருஷ்ணராயபுரம் மேட்டு மகாதானபுரம் பகுதியில், காவிரி குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் பஞ்சாயத்து மேட்டு மகாதானபுரம் வழியாக, காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் வழியாக, மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிறது. கடந்த வாரம், மேட்டு மகாதானபுரம் பகுதி வழியாக செல்லும், குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் தினமும் வீணாகிறது.இதனால் கிராம மக்களுக்கு தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடை தெருவில், அதிகமான அளவில் தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் குழாய் விரிசலை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை