ஆத்துார் சிறுவர் பூங்காவில் விளையாட்டு சாதனங்கள் சேதம்
கரூர்: மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக உள்ள, ஆத்துார் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்.கரூர் அருகில், பூலாம்பாளையம் பஞ்.,க்குட்பட்ட ஆத்துாரில், சிறுவர்களுக்கான பூங்கா உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பூங்காவில், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் இருந்தன. பஞ்., நிர்வாகம் சரிவர பராமரிக்காததால், ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. போதிய விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் பூங்காவில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. விளையாட்டு பொருட்கள் உடைந்திருப்பதால், உடலை பதம் பார்க்கும் என்பதால், யாரும் விளையாட வருவதில்லை. உடனடியாக பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.