உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாய்ந்துள்ள மின் கம்பங்களால் அபாயம்

சாய்ந்துள்ள மின் கம்பங்களால் அபாயம்

அரவக்குறிச்சி:க.பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரி கிராமத்தில், விவசாய நிலத்தில் சாய்ந்து கிடக்கும் உயர் மின்கம்பங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.க.பரமத்தி அருகே விஸ்வநாதபுரி கிராமத்தில், மதுரை வீரன் சுவாமி, கண்ணார் எனப்படும் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள, விவசாய தோட்ட நிலங்களில் உயர் மின் அழுத்த மின்கம்பங்கள் ஆபத்தான முறையில் சாய்ந்து கிடக்கின்றன. குறிப்பாக காற்றடிக்கும் காலங்களில், மின்கம்பங்கள் மேலும் சாய்ந்து, விவசாய நிலத்தில் விழும் அபாயம் அதிகரித்துள்ளது.இதனால் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள், தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், மின்கம்பம் முறிந்து விழுந்தால் பெரும் விபத்து ஏற்படுவதோடு, மின் தடை, பயிர் சேதம் மற்றும் சொத்து இழப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் அளிக்கப்பட்டும், இதுவரை நிரந்தர தீர்வு மேற்கொள்ளப்படவில்லை.சாய்ந்து கிடக்கும் உயர் மின் அழுத்த மின்கம்பங்களை சீரமைக்கவும், தேவையான இடங்களில் புதிய கம்பங்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் மின்சார வாரியம் மற்றும் அரசு துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !