உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மில்கேட் பகுதியில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்

மில்கேட் பகுதியில் நிறுத்தும் வாகனங்களால் அபாயம்

கரூர் கரூர் அருகில், மில்கேட் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கருர் சுங்ககேட்டில் இருந்து தான்தோன்றிமலை, கலெக்டர் அலுவலகம் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையின் மையத்தில் தடுப்புச்சுவர் வைக்கப்பட்டுள்ளது. தான்தோன்றிமலை வடக்குத் தெரு பகுதியில் இருந்து, தனியார் மருத்துவமனை வழியாக மில்கேட் சாலை பிரிவு வரை, ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, நீண்ட நேரம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. தான்தோன்றிமலையில் இருந்து, கரூர் நோக்கி வரும் வாகனங்கள் எளிதாக வளைந்து செல்ல முடியவில்லை. வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மில்கேட் பகுதி பிரிவு பகுதியில், வாகனங்கள் நிறுத்தத்தை கண்காணித்து, அதனை முறைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ