மேலும் செய்திகள்
டவுன் பஸ் படிகளில் ஆபத்தான பயணம்
25-Oct-2024
கரூர்: கரூர், மினி பஸ் ஸ்டாண்டில் இருந்து, 60க்கும் மேற்பட்ட பஸ்கள், தான்தோன்றிமலை, காந்தி கிராமம், ஏமூர், அரசு கலை கல்லுாரி, புன்னம், வெங்கமேடு, அரசு காலனி, வாங்கல், சோமூர், நெரூர், குப்பிச்சிபாளையம், கோடங்கிப்பட்டி, சாரதா கல்லுாரி, குட்டைக்கடை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரும், பொது மக்களும் பயணம் செய்கின்றனர். ஆனால், மினி பஸ்களில் அளவுக்கு அதிகமான பயணிகள் ஏற்றிச்செல்வதோடு, படிக்கட்டுகளில் நின்று செல்லும் ஆபத்தான பயணமும் மேற்கொள்ளப்படுகிறது.சென்னையில் ஏற்பட்ட விபத்துக்கு பின், லைட் ஹவுஸ் கார்னர், சர்ச் கார்னர் போன்ற பகுதிகளில் வழியாக மினி பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்பவர்களை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். அப்போது படிக்கட்டு பயணம் ஓரளவு குறைந்தது.தற்போது, அதிகமான பயணிகள் மினி பஸ்களில் ஏற்றப்படுகின்றனர். இளைஞர்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். எனவே, விபத்தை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25-Oct-2024