உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விராலிமலை ஆறுமுக பெருமானுக்கு பக்தர்கள் 108 காவடி, தீர்த்தக்குடம்

விராலிமலை ஆறுமுக பெருமானுக்கு பக்தர்கள் 108 காவடி, தீர்த்தக்குடம்

குளித்தலை:குளித்தலை, கடம்பனேஸ்வரர் காவேரி நதிக்கரையில் இருந்து, விராலிமலை ஆறுமுக பெருமானுக்கு, சன்மார் தவயோகி வெள்ளையம்மாள் அருள் ஆசியுடன் நேற்று காலை, 54ம் ஆண்டாக நடத்தும் 108 காவடி பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து, குளித்தலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க, விராலிமலைக்கு வாகனங்கள் மூலம் பக்தர்கள் காவடி சுமந்தபடியே சென்றனர். செல்லும் வழியில் கோட்டமேடு, மைலாடி ஆகிய இடங்களில் நீர்மோர், பானகம் வழங்கப்பட்டன. தொடர்ந்து அய்யர்மலை கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, காவடி ஆட்டம் ஆடினர்.வைர பெருமாள்பட்டி, திம்மம்பட்டி, சிவாயம், மேலப்பட்டி, அய்யர்மலை, குப்பாச்சிபட்டி, மத்திபட்டி, அறப்பளிப்பட்டி, கணக்கம்பட்டி, புனவாசிப்பட்டி, குளித்தலை, தோகைமலை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடங்களை சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி