உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆக.,11ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம்

ஆக.,11ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம்

கரூர், வரும், 11ல், குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:கரூர் மாவட்டத்தில், 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட, 2,39 லட்சம் பேர் மற்றும் 20 முதல், 30 வயதுக்குள், 80,627 பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு, அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து, குடற்புழு நீக்க மருந்து வழங்கப்படவுள்ளது. குடற்புழு நீக்க முகாம் வரும், 11ல் அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அதில் விடுபட்டவர்களுக்கு வரும், 18ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி