உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தி.மு.க., முப்பெரும் விழா கரூரில் நிர்வாகிகள் கூட்டம்

தி.மு.க., முப்பெரும் விழா கரூரில் நிர்வாகிகள் கூட்டம்

கரூர்: கரூர் தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், முப்பெரும் விழா குறித்து ஆலோசனை நடந்தது.மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள், ஈ.வெ.ரா., பிறந்த நாள், தி.மு.க., தொடக்க நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக, செப்.,17ல் ஆண்டுதோறும் கொண்டாடப்-பட்டு வருகிறது. இந்தாண்டு முப்பெரும் விழா கரூரில் நடத்தப்ப-டுகிறது. அன்று கரூருக்கு வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்-பது. செப்., 15ல் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த-நாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அளவில் உறுதி-மொழி கூட்டங்கள் நடத்த வேண்டும். வரும், 20ல் கரூர் செங்-குந்தபுரம், 80 அடிசாலையில், ஓரணியில் தமிழ்நாடு தொடர்பாக பொது கூட்டம் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மா-னங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாநகர செயலர் கனகராஜ், கரூர் மாநகர பகுதி செயலர்கள் ராஜா, சுப்பிரமணியன், ஜோதிபாசு, குமார், பாண்டியன், ஒன்றிய செயலர்கள் பாஸ்கரன், வேலுசாமி, முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை