லாரியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பலி
கரூர் கரூர் அருகே, திடீரென தானாக சென்ற லாரியை நிறுத்த முயன்ற டிரைவர், தவறி விழுந்து உயிரிழந்தார்.ஆந்திரா மாநிலம், சித்துார் கோதமண்டலம் பகுதியை சேர்ந்தவர் கமல், 46, லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் கரூர் அருகே ஆத்துார் பிரிவில், இன்ஜினை ஆப் செய்யாமல், லாரியை நிறுத்தி விட்டு, சிறுநீர் கழிக்க இறங்கியுள்ளார். ஆனால், லாரியின் ேஹண்ட் பிரேக்கை சரிவர டிரைவர் கமல் போடவில்லை. இதனால், லாரி திடீரென தானாக சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த டிரைவர் கமல், லாரியில் ஏறி, இன்ஜினை ஆப் செய்துள்ளார்.அதேசமயம், லாரியில் இருந்து கீழே தவறி விழுந்த டிரைவர் கமல், தலையில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து,கமலின் மனைவி ஸ்ரீதேவி, 34, போலீசில் புகார் செய்தார்.வாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.