முருங்கை கிலோ ரூ.250
கரூர்: கரூர் மாவட்டத்தில், 8,154 ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி நடந்து வருகிறது. இதில், அர-வக்குறிச்சி, க.பரமத்தி உள்பட சுற்று வட்டார பகு-திகளில் பெருமளவு முருங்கை சாகுபடி நடக்கி-றது. தற்போது, அதிகளவு பனிப்பொழிவு மற்றும் மழை பெய்ததால் மகரந்த சேர்க்கை நடக்கா-ததால், முருங்கை வளர்ச்சி பாதிக்கப்பட்டு விலை உயர்ந்துள்ளது.இதுகுறித்து, விவசாய விழிப்புணர்வு இயக்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:முருங்கை இலை, காய், பூ ஆகியவற்றில் இரும்-புச்சத்து அதிகம் இருப்பதால், மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். தற்போது, மழை, கடும் பனிப்-பொழிவு காரணமாக முருங்கை பூக்கள் உதிர்ந்து விடுகிறது. இதனால், காப்பு பாதிக்கப்பட்டு குறைந்தளவில் விளைச்சல் உள்ளது. அரவக்கு-றிச்சி, க.பரமத்தி இருந்து, வெளிநாடுகளுக்கு ஏற்-றுமதி செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது வெளி மாநிலங்களில் இருந்து, முருங்கை இறக்-குமதி செய்து விற்பனை நடந்து வருகிறது.கடந்த மாதம், முருங்கைக்காய் கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்-தது. தற்போது, ஒருகிலோ, கரும்பு முருங்கை, 250 ரூபாய், செடி முருங்கை கிலோ, 200 ரூபாய், மர முருங்கை கிலோ, 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.