உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்வித்துறை நிர்வாக சங்கம் ஆர்ப்பாட்டம்

கல்வித்துறை நிர்வாக சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூர்:தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அதில், இளநிலை உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற, அமைச்சு பணியாளர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் மற்றும் சிறப்-பாசிரியர் பணி மாறுதல் வழங்க வேண்டும்; பள்ளிக்கல்வி துறையில் நிரப்பப்படாமல் உள்ள அடிப்படை பணியாளர் பணியி-டங்களை ஏற்படுத்த வேண்டும்; கணினி மற்றும் அது சார்ந்த உப-கரணங்களை பராமரிக்க போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ