உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி பணி

கிருஷ்ணராயபுரம் :கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையந்தோட்டம், புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, வேப்பங்குடி, சிவாயம், பாப்பகாப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகளில் காய்கள் பிடித்துள்ளன. காய்கள் பறிக்கப்பட்டு கரூர், திருச்சி, குளித்தலை, முசிறி, தோகைமலை ஆகிய பகுதிகளில் செயல்படும் காய்கறி மார்க்கெட்களுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது. மொத்தமாக விற்பனை செய்யும் போது கிலோ, 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ