மேலும் செய்திகள்
கணவர் கண் எதிரே விபத்தில் மனைவி பலி
09-Jul-2025
கரூர், கரூர் அருகே, மொபட் மீது வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.கரூர் மாவட்டம், தோரணகல்பட்டி காமராஜ் நகரை சேர்ந்தவர் அல்லிமுத்து, 79. இவர் கடந்த, 24ம் தேதி கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில் டி.வி.எஸ்., மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் பாகநத்தம் பகுதியை சேர்ந்த குப்புசாமி, 55, என்பவர் ஓட்டி சென்ற வேன், மொபட் மீது பயங்கரமாக மோதியது. அதில், கீழே விழுந்த அல்லிமுத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, அல்லிமுத்து மகன் சத்தியசீலன் அளித்த புகார்படி, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
09-Jul-2025