உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மிரட்டி பணம் பறித்தவர் குண்டாஸில் அதிரடி கைது

மிரட்டி பணம் பறித்தவர் குண்டாஸில் அதிரடி கைது

கரூர்:குளித்தலையில், பலரை மிரட்டி பணம் பறித்தவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் அய்யர்மலையை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 47. இவர் கடந்த மார்ச், 27ல் குளித்தலை பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன், 51, என்பவரிடம், பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இது தொடர்பான புகாரில், சண்முக சுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கனவே, பலரிடம் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்யகோரி, கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா கரூர் மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கலெக்டர் தங்கவேல் உத்தரவுபடி, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் உள்ள சண்முகசுந்தரத்திடம், அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை