உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூக்கள் விலையில் சரிவு

பூக்கள் விலையில் சரிவு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாயனுார், காட்டூர், செக்கணம், எழுதியாம்பட்டி, உடையந்தோட்டம், மகிளிப்பட்டி, தாளியாம்பட்டி, புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் விரிச்சிப்பூக்கள், சின்னரோஜா, செண்டுமல்லி, மல்லிகை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வெயில் அதிகம் இருப்பதால் செடிகளில் பூக்கள் வரத்து உள்ளது. செடிகளில் பூக்களை விவசாயிகள் பறித்து கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய பகுதிகளில் செயல்படும் பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை நடக்கிறது.தற்போது பூக்கள் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ விரிச்சிப்பூக்கள், 80 ரூபாய், செண்டு மல்லி, 40 ரூபாய், சின்னரோஜா, 120 ரூபாய், மல்லிகை, 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ