உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது

குளித்தலை: குளித்தலை அடுத்த பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்-னுசாமி, 52; விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத நபரின் மாடு ஒன்று புகுந்து பயிரை மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னு-சாமி, கடந்த, 15 இரவு, 8:00 மணிக்கு, பிச்சம்பட்டி பிள்ளையார் கோவில் அருகே, பயிர் நாசமாகிவிட்டதே என, புலம்பியபடி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த சுப்பிர-மணி, 41, தகாத வார்த்தைகளில் பேசி கீழே கிடந்த கட்டையால் பொன்னுசாமியை தாக்கியுள்ளார். தடுக்க வந்த பொன்னுசா-மியின் மனைவிக்கு, சுப்பிரமணி கொலை மிரட்டல் விடுத்-துள்ளார். இதில் காயமடைந்த பொன்னுசாமி, கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்து பொன்னுசாமி அளித்த புகார்படி, சுப்பிரமணியை கைது செய்த மாயனுார் போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ