அரவக்குறிச்சியில் இன்று இலவச கண் பரிசோதனை
அரவக்குறிச்சி: கரூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன், அரவக்குறிச்சி சி.எஸ். அறக்கட்டளை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும், இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (26ம் தேதி) நடைபெற உள்ளது.அரவக்குறிச்சி, ஆறுமுகம் அகாடமி பள்ளியில் நடைபெறும் முகாமில் கண்புரை நோயாளிகள், கண்ணீர் அழுத்த நோய் உள்ள-வர்கள், கிட்ட பார்வை, துாரப்பார்வை, வெள்ளெழுத்து உள்-ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள், முகாமில் கலந்து கொள்ளலாம் என, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.