திருக்காடுதுறையில் இலவச கோமாரி தடுப்பூசி முகாம்
கரூர் :கரூர் மாவட்டம், திருக்காடுதுறையில், தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், இலவச கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.நிறுவனத்தின் முதன்மை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார் தலைமை வகித்தார். நொய்யல், நடந்தை கால்நடை மருத்துவமனைகளின் டாக்டர் தமிழரசன், உஷா, அசோக்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினரால் நொய்யல், மறவாபாளையம், சேமங்கி, முத்தனுார், புங்கோடை குளத்துப்பாளையம், புங்கோடை காளிபாளையம் உள்ளிட்ட, 20 கிராமங்களை சேர்ந்த, 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து மாவு இலவசமாக வழங்கப்பட்டது.