உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வளைவு சாலையில் அடிக்கடி விபத்து

வளைவு சாலையில் அடிக்கடி விபத்து

வளைவு சாலையில்அடிக்கடி விபத்துகுளித்தலை, டிச. 2-குளித்தலை அடுத்த கே.பேட்டை பஞ்., அலுவலகம் அருகே, திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே, அதிகளவில் விபத்து ஏற்படும் வளைவு சாலை உள்ளது. இந்த வளைவு சாலையில், நேருக்கு நேர் வாகனங்கள் மோதி உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் நிகழ்கிறது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகத்திடமும், சாலை பாதுகாப்பு தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், கண்டும் காணாமல் உள்ளனர்.எனவே, இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆபத்தான வளைவில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ