உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

சாலையோரம் குவிந்துள்ள குப்பையால் சுகாதார சீர்கேடு

கரூர்:கரூர் அருகே, ஆண்டாங்கோவில் சாலையில் அதிகளவில் குப்பைகள் குவிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.கரூர்-ஆண்டாங்கோவில் சாலை வழியாக, மதுரை, திண்டுக்கல் மாவட்ட பகுதிகளுக்கு பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், ஆண்டாங்கோவில் சாலையில் கடந்த சில நாட்களாக, அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. குறிப்பாக, இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்துள்ளன.இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.மேலும், சாலையில் குவிந்துள்ள குப்பைகள் காற்றில் பறப்பதால், வாகன ஓட்டிகள், டூவீலர்களில் செல்கிறவர்கள் தடுமாறுகின்றனர். ஆண்டாங்கோவில் சாலை, ஈ.வெ.ரா., வளைவு பிரிவில் அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதனால், கரூர்-ஆண்டாங்கோவில் சாலையில் குவிந்துள்ள குப்பைகளை, உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !