பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில செயலராக கோபிநாத் நியமனம்
கரூர், : பா.ஜ., ஓ.பி.சி., அணியின் மாநில செயலராக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில், பா.ஜ., சார்பில் பல்வேறு அணிகளின், நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில், பா.ஜ., ஓ.பி.சி., அணி மாநில செயலராக, கரூரை சேர்ந்த கோபிநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே, பா.ஜ.,வில் இளைஞர் அணி மாநில செயலர், தொழில் பிரிவு மாநில செயலர், கரூர் மாவட்ட பொதுச்செயலர் ஆகிய பொறுப்புகளில் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.