உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாவட்ட குரலிசை போட்டி அரசு பள்ளி மாணவர் முதலிடம்

மாவட்ட குரலிசை போட்டி அரசு பள்ளி மாணவர் முதலிடம்

அரவக்குறிச்சி: கரூரில் நடந்த மாவட்ட அளவிலான குரலிசை போட்டியில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார்.தமிழக அரசின், கலை பண்பாட்டுத்துறையின், ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், மாணவர்களுக்கான நுண்கலைத்திறன் போட்டி, கரூரில் நடந்தது. இதில், குரலிசை போட்டியில், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மூன்றாம் வகுப்பு மாணவன் முகமது ஷாகிர் முதலிடம் பிடித்தார். மற்றொரு மாணவன் முகமது ஷாரிக், ஓவிய போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு, திருச்சி தமிழ் பண்பாட்டுத்துறை அலுவலர் சமீம் பானு, கேடயம் வழங்கினார். ஜவகர் சிறுவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பவுலின் செபாஸ்டின் மேரி, சான்றிதழ் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களை, வட்டாரக்கல்வி அலுவலர்கள் சதீஷ்குமார், பாண்டித்துரை, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ