உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக தண்ணீர் தினத்தையொட்டி மூக்கணாங்குறிச்சியில் கிராம சபை

உலக தண்ணீர் தினத்தையொட்டி மூக்கணாங்குறிச்சியில் கிராம சபை

கரூர்: உலக தண்ணீர் தினத்தையொட்டி, கரூர், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி பஞ்., விஜயபுரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கலெக்டர் தங்கவேல் கலந்து-கொண்டு பேசியதாவது:தற்போது கோடைகாலம் என்பதால், சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி போன்ற நோய்களிலிருந்து தற்காத்துக்-கொள்ள, நீர் சார்ந்த உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாகம் இல்லை என்றாலும், நீர் பருக வேண்டும். சூடான பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் பருகுவதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகிய-வற்றை பருகலாம். மழைநீரை சேகரித்தல், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துதல், உடைந்த குழாய்களை சரிசெய்து நீர் வீணாகாமல் பாதுகாத்தல், மறுசுழற்சிக்கு உட்படுத்துதல், நிலத்தடி நீரை செறிவூட்டுதல், நீரின் துாய்மையை பாதுகாத்தல் மற்றும் நீர் மாசுபாட்டை தடுத்தல், மரம் வளர்த்தலை ஊக்குவித்தல், வீட்டுக்கொரு மரம் வளர்த்தல் உள்ளிட்ட அனைவரிடமும் எடுத்துக்கூறுதல் வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் சாந்தி, வேளாண் இணை இயக்குனர் சிவானந்தம், கலெக்டரின் நேர்-முக உதவியாளர் தேன்மொழி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரியா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை