உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.9.77 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

ரூ.9.77 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

கரூர், சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 9 லட்சத்து, 77 ஆயிரத்து, 113 ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனையானது.நொய்யல் அருகே சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நிலக்கடலை ஏலம் நடந்தது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 389 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 67.41 ரூபாய், அதிகபட்சமாக, 78.20 ரூபாய், சராசரியாக, 77.16 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 12 ஆயிரத்து, 954 கிலோ எடையுள்ள நிலக்கடலை, 9 லட்சத்து, 77 ஆயிரத்து, 113 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ