உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குரூப் 4 தேர்வு: மே 13 முதல் பயிற்சி வகுப்பு

குரூப் 4 தேர்வு: மே 13 முதல் பயிற்சி வகுப்பு

கரூர், மே 8கரூர், வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் வரும், 13ல் தொடங்குகிறது. பயிற்சி வகுப்புகளில் காற்றோட்டமான அறை, குடிநீர் வசதி, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி, பொது அறிவுக்கான மாத இதழ்கள், பயிற்சி கால அட்டவணை, நாள்தோறும் சிறு தேர்வுகள், மென்பாட குறிப்புகள் எடுத்து கொள்ள இணையதளத்துடன் கூடிய கணினி வசதிகளுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.ஒவ்வொரு புதன் கிழமையும் மாதிரி தேர்வு, ஒவ்வொரு சனிக்கிழமையும் வாரத் தேர்வு, மண்டல அளவில் மாதிரி தேர்வு மற்றும் மாநில அளவில் முழு மாதிரி தேர்வுகள் நடக்கும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள இளைஞர்கள், உடனடியாக கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக அல்லது 04324 -223555, 63830 50010 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை