உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது

குட்கா பொருட்கள் கடத்தியவர் கைது

கரூர்: கரூர் அருகே, ஈரோடு சாலை குட்டக்கடை பகுதியில், நேற்று அதிகாலை, 12:30 மணிக்கு போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வேகமாக சென்ற வெள்ளை நிற இன்டிகா காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, 147 கிலோ குட்கா பொருட்கள் கடத்தியது தெரிய வந்தது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்.இதையடுத்து, காரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த தேவராஜ், 42, என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், கார் மற்றும் குட்கா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ