உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

கரூர் :கரூர் மாவட்ட, ஊர்க்காவல் படைக்கு ஆயுதப்படை மைதானத்தில், நேற்று தேர்வு நடந்தது.கரூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, 37 ஆண்கள், ஐந்து பெண் ஊர்க்காவல் படை வீரர் பதவிக்கு, தகுதியான நபர்களிடமிருந்து கடந்த மாதம், விண்ணப்பங்கள் பெறப்பட்டது.கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி மற்றும் தவறியவர்கள். கடந்த, 31.07.25 அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 45 வயதுக்கு மிகாமல் உள்ள, 100க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.நேற்று காலை, கரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், விண்ணப்பித்தவர்கள் அழைக்கப்பட்டு தேர்வு நடந்தது. இறுதியாக, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டு மாதம், 5 நாட்கள் பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு, 560 ரூபாய் வீதம், 2,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை