உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ஏ.என்.டி.எப்.,க்கு இன்ஸ்பெக்டர் நியமனம்

கரூர் ஏ.என்.டி.எப்.,க்கு இன்ஸ்பெக்டர் நியமனம்

கரூர்:கரூர் மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு அதிரடிப்படைக்கு, புதிய போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.போதைப்பொருள் எதிர்ப்பு அதிரடிப்படை, 'ஆன்டி- நார்கோடிக்ஸ் டாஸ்க் போர்ஸ்' (ஏ.என்.டி.எப்.,) என்பது தமிழகத்தில், போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிப்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு காவல் பிரிவாகும். முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இப்படைக்காக, முதல் கட்டமாக, 55 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 65 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் மற்றும், 780 போலீசாரை நியமனம் செய்து, கடந்த, 12ல் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.கரூர் மாவட்ட போதைப்பொருள் எதிர்ப்பு அதிரடிப்படைக்கு, பெரம்பலுார் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த அதிரடிப்படைக்கு, நான்கு போலீஸ் எஸ்.ஐ.,க்களும், 20 போலீசாரும் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ