உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்று நடும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

மரக்கன்று நடும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்

கிருஷ்ணராயபுரம்:வேங்காம்பட்டி கிராமத்தில், புதிய மரக்கன்றுகள் நடுவதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து, வேங்காம்பட்டி கிராமத்தில் இருந்து பாலப்பட்டி செல்லும் குறுக்கு சாலையில், புதிய மரக்கன்றுகள் நடுவதற்கான பணி துவங்கியது. இதில் சாலையோரத்தில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு மரக்கன்றுகள் நடுவதற்கான பணி நடந்தது. வேம்பு, புளியன், ஈட்டி, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இந்த சாலையில், 300க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை