உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தார் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

தார் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம்:பஞ்சப்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில், தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.கிருஷ்ணராயபுரம் யூனியனுக்கு உட்பட்ட, பஞ்சப்பட்டி பஞ்சாயத்து பகுதியில், நபார்டு மூலம் நடுப்பட்டி காலனி முதல், தாதம்பட்டி வரை தார் சாலை பலப்படுத்தும் பணி, ஒரு கோடியே, 37 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கியது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக, துவங்காமல் இருந்த பணிகள் மீண்டும் நடந்து வருகிறது. நடுப்பட்டி காலனி முதல் தாதம்பட்டி வரை புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையின் இருபுறமும் செம்மண் கொட்டப்பட்டு, சமன்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை