உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / லாலாபேட்டை வாய்க்காலை துார் வார நடவடிக்கை தேவை

லாலாபேட்டை வாய்க்காலை துார் வார நடவடிக்கை தேவை

கரூர்:லாலாபேட்டை அருகே, கொடிங்கால் வாய்க்காலை துார்வார வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.லாலாபேட்டை அருகே புதுப்பட்டி சைபனில் இருந்து, கொடிங்கால் வடிகால் வாய்க்கால் உதயமாகி கே.பேட்டை, கோட்டமேடு, பரளி, மேட்டு மருதுார், குமாரமங்கலம், பெட்டவாய்த்தலை வழியாக சென்று, உய்யங்கொண்டான் வாய்க்காலுடன் கலக்கிறது. கடவூர் பகுதியில் இருந்து வரும் பூங்காற்று வாரி மூலமும், மழை காலங்களில், வாய்க்காலுக்கு உபரி நீர் வருகிறது.ஆனால், வாய்க்காலில் புல்கள், சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், வாய்க்காலில் தண்ணீர் திறக்கும் போது, நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. கடைமடை பகுதிவரை பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியவில்லை. எனவே, வாய்க்காலை துார்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ