கால்வாயில் விழுந்த ஆட்டுக்குட்டி மீட்பு
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, பட்டாணி தெருவில், 3 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்த ஆட்டு குட்டியை, ஒரு மணி நேரம் போராடி துாய்மை பணியாளர்கள் மீட்டனர்.பள்ளப்பட்டி, பட்டாணி தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில், ஆட்டு குட்டி ஒன்று விழுந்து நீண்ட நேரமாக சத்தமிட்டபடி இருந்தது. அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த துாய்மை பணியாளர்கள், 3 அடி ஆழமுள்ள கழிவுநீர் கால்வாயில் இறங்கி, உயிருக்கு போராடி கொண்டிருந்த மூன்று மாத ஆட்டு குட்டியை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். அவர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.