உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிராம சாலைகள் இணையும் நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்

கிராம சாலைகள் இணையும் நெடுஞ்சாலையில் எரியாத விளக்குகள்

கரூர்: கரூர் அருகே விபத்துகளை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைகளில், அமைக்கப்பட்ட ஒளிரும் விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், கிராம இணைப்பு சாலைகளில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கரூரில் இருந்து சேலம், திருச்சி மற்றும் மதுரைக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதில், கார்கள் குறைந்தபட்சம் மணிக்கு, 100 கி.மீ., வேகத்தில் செல்கிறது. இதனால், நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகி-றது. உயிரிழப்புகளும் அதிகரிக்கிறது.குறிப்பாக, கிராமங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் சாலையில், விபத்துகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளது. இதனால், அப்பகுதி மக்கள், இணைப்பு சாலை பகு-தியில் குகை வழிப்பாதை அல்லது மேம்பாலம் கட்ட வேண்டும் என, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்-றனர்.கரூர் மாவட்டத்தில், திருச்சி சாலையில் வீரராக்கியம் பிரிவு, கோடங்கிப்பட்டி ஆகிய இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்ப-டுகிறது. அதை தடுக்கும் வகையில், திருச்சி சாலை, மதுரை சாலை மற்றும் சேலம் சாலைகளில், கிராம சாலை இணையும் பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சோலார் அமைப்புடன், 24 மணி நேரம் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கரூர்-திருச்சி சாலை நரிகட்டியூர் பிரிவில் அமைக்-கப்பட்டுள்ள, ஒளிரும் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரி-யாமல் உள்ளது. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கரூர்-திருச்சி சாலை நரிகட்டியூர் பிரிவில் ஒளிரும் விளக்குகளை, எரிய வைக்கும் வகையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டி-யது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி