உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சுண்ணாம்புக்கல் குவாரி திட்டம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

சுண்ணாம்புக்கல் குவாரி திட்டம்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

குளித்தலை, ஜன. 3-குளித்தலை அடுத்த, கடவூர் தாலுகா, சிந்தாமணிபட்டியில் நேற்று கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து, சுண்ணாம்புக்கல் குவாரி அமைப்பது சம்பந்தமாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ.. கண்ணன் தலைமை வகித்தார். இதில் கடவூர் தாலுகா, தென்னிலை கிராமத்தில், 2.51 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ராகவேந்திரா மினரல்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்தினரின், சுண்ணாம்புக்கல் குவாரி திட்டம் மற்றும் தனபால் சுண்ணாம்புக்கல் குவாரி திட்டம் குறித்து கருத்து கேட்கப்பட்டது.இதில் பங்கேற்ற சமூக அமைப்பை சேர்ந்த நாகராஜன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் ஆகியோர், சட்டத்திற்கு புறம்பாக உண்மையான ஆவணங்களை மறைத்து கல்குவாரி இயங்க முயற்சி செய்கிறது. கல்குவாரி அருகில் குடியிருப்புகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் கோவில்கள் உள்ளன. கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றனர்.கல்குவாரி நிறுவனம் இப்பகுதி மக்களுக்கு தேவையான பள்ளி, மருத்துவம், கோவில், கட்டுமானம் உள்ளிட்ட பல சேவைகளை செய்து வருகின்றனர். எனவே, கல்குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்களில் சிலர் பேசினர். 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ