உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / குறைந்த வட்டியில் மீன் வளர்ப்புக்கு கடன் உதவி;விண்ணப்பிக்க அழைப்பு

குறைந்த வட்டியில் மீன் வளர்ப்புக்கு கடன் உதவி;விண்ணப்பிக்க அழைப்பு

கரூர், மீன் வளர்ப்புக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் மீன்வளத்துறைக்காக மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டது. இந்த நிதியம், அடை யாளம் காணப்பட்ட மீன்வள உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநில நிறுவனங்கள் உள்ளிட்ட தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, சலுகை அடிப்படையில் நிதி உதவி அளிக்கிறது. இதில் நபார்டு வங்கி, தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழகம், அனைத்து பட்டியலிடப்பட்ட வங்கிகள், மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு உற்பத்தி நிதியம் ஆகியவற்றின் மூலம் ஆண்டுக்கு, 5 சதவீதம் குறையாத வட்டி விகிதத்தில் கடன் வசதி வழங்குகின்றன. 3 சதவீதம் வரை வட்டி மானியத்தை வழங்குகிறது.அசல் தொகை திரும்ப செலுத்துவதில், இரண்டு ஆண்டுகள் விடுப்பு உட்பட அதிகபட்சமாக திரும்ப செலுத்தும் காலம், 12 ஆண்டுகளாகும். http://dof.gov.in என்ற இணையதளத்தில் கூடுதல் விபரங்களை அறியலாம். மேலும் விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சத்தியமூர்த்தி நகர், தான்தோன்றிமலை, கரூர் அலுவலகத்தை, 04324 255 177/255179 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை