உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாஜி பா.ம.க., நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மாஜி பா.ம.க., நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

கரூர்: கரூர் மாவட்ட, பா.ம.க., முன்னாள் தலைவரை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அறிவித்-துள்ளார்.கரூர் காளியப்ப கவுண்டனுார் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத், 45; கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., முன்னாள் தலைவர். இவர் கடந்த, 9ல் குளித்தலை அருகே தரகம்பட்டியில், கனிம வளத்-துறை ஆய்வாளர் கார்த்திக், 35, என்பவரை மிரட்டியதாக, சிந்தா-மணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு-கின்றனர். இதையடுத்து, பிரேம்நாத்தை, பா.ம.க.,வில் இருந்து நீக்கியுள்ளதாக, அக்கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ் அறி-விப்பு வெளியிட்டுள்ளார். இந்த தகவலை, கரூர் மாவட்ட பா.ம.க., செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ