உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பஞ்சப்பட்டி மழை நீர் சேமிப்பு குளத்தில் பராமரிப்பு பணி

பஞ்சப்பட்டி மழை நீர் சேமிப்பு குளத்தில் பராமரிப்பு பணி

கி.புரம், சுக்காம்பட்டி பிரிவு சாலை அருகில் உள்ள, மழை நீர் சேமிப்பு பராமரிப்பு பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி பஞ்சாயத்து, சுக்காம்பட்டி பிரிவு சாலை அருகில் மழை நீர் சேமிப்பு குளம் உள்ளது. இங்குள்ள மழை நீரால், விவசாயிகளின் கிணறுகளில் நீர் மட்டம் உயர்த்தப்படுகிறது. தற்போது மழை நீர் சேமிப்பு குளத்தில், அதிகமான முள் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் மழை நீர் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு மழை நீர் சேமிப்பு குளத்தில், வளர்ந்த முள் செடிகள் முழுமையாக அகற்றப்பட்டன. இதனால், மழை பெய்தால். சாலை வழியாக வரும் மழை நீர், குளத்தில் சேமிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை