உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்

மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்

கரூர், நவ. 29-கரூர், தான்தோன்றிமலை மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி முதல்வர் ஜெயசித்ரா தலைமை வகித்தார். கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இதில், மலர் மெட்ரிக் பள்ளி மாணவன் ஸ்ரீ அருள் நந்தன் பங்கேற்று, மாவட்ட அளவில் மூன்றாவது இடம் பிடித்து வெற்றி பெற்றார். பள்ளி தாளாளர் பேங்க் சுப்ரமணியன், அந்த மாணவனுக்கு சான்றிதழ், பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில், விளையாட்டு ஆசிரியர் சக்திவேல், ஆசிரியை ராஜலஷ்மி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ