உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கரூர்:கரூர் மாவட்டம், டி.செல்லாண்டிப்பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,45; கூலி தொழிலாளி. இவர் கடந்த, சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த மே, 25 ல் டி.செல்லாண்டிப்பாளையத்தில், தனியார் மருத்துவமனை மாடியில் அமர்ந்திருந்த ராமச்சந்திரன், திடீரென தவறி கீழே விழுந்தார். அதில், தலையில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது தந்தை குப்புசாமி, 83; போலீசில் புகார் செய்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ