அரவக்குறிச்சி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்
அரவக்குறிச்சி, :அரவக்குறிச்சி, அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.தலைமை ஆசிரியர் முத்தையா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்ஜிஆர் மனோகரன் உள்பட குழுவினர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.பள்ளிக்கு புதியதாக வகுப்பறை கட்டடம் கட்ட பரிந்துரை, பள்ளி சுகாதார மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான ஊதியம், 5,000 ரூபாய் பெற்று வழங்க வேண்டும், மாணவியருக்கு தற்காப்பு கலைகளை கற்றுக்கொடுக்க ஆசிரியைகளை நியமிக்க வேண்டும், மாணவியருக்கு சமூக அறிவியல் பாடம் கற்றுத்தர ஆசிரியரை நியமிக்க வேண்டும், கழிப்பறை கதவுகளை சரி செய்ய வேண்டும்.தானியங்கி பெரிய மணி அமைக்க வேண்டும் உள்ளிட்ட எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.