மேலும் செய்திகள்
பூத வாகனத்தில் மாரியம்மன் உற்சவர் திருவீதி உலா
21-May-2025
கரூர், வைகாசி திருவிழாவையொட்டி, கரூர் மாரியம்மன் கோவிலில், புஷ்ப வாகனத்தில் அம்மன் உற்சவர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி விசாக திருவிழா கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் துவங்கியது. 16ல் பூச்சொரிதல் விழா, 18ல் காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து நாள்தோறும் காலையில் பல்லக்கிலும், மாலையில் ரிஷபம், புலி, பூத, சிம்ம, அன்ன, சேஷ, யானை, குதிரை, காமதேனு, கஜலட்சுமி என பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது.கடந்த மூன்று நாட்களாக காலை, 7:00 மணி முதல் இரவு வரை தேரோட்டம், அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், கரும்பு தொட்டிலில் குழந்தையை எடுத்து வருதல், மாவிளக்கு ஊர்வலம் என பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் விழா நடந்தது.நேற்று புஷ்ப வாகனத்தில், அம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இன்று கருட வாகனம், நாளை மயில் வாகனம், 1ல் கிளி வாகனம், 2ல் வேப்பமர வாகனம், 3ல் பின்னமர வாகனத்தில் அம்மன் அருள் பாலிக்கிறார். 4ல் புஷ்ப அலங்காரம், 5ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7ல் ஊஞ்சல், 8ல் அம்மன் குடி புகுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.
21-May-2025