உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

கரூர் :புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன வளாகத்தில், வேலாயுதம்பாளையம் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.காகித நிறுவனத்தின் பொது மேலாளர் (மனிதவளம்) கலைச்செல்வன் தலைமை வகித்தார். சமுதாய மேம்பாட்டு நலப்பணியாக, காகித ஆலையை சுற்றி அமைந்துள்ள கிராமப்புற மக்களுக்கு கல்வி, மருத்துவம், உடல் நலம், உட்கட்டமைப்பு வளர்ச்சி, சமூக மேம்பாடு, பொருளாதார, வாழ்வாதார மேம்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம், கலாசாரம் மற்றும் பாரம்பரியம், மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில், வேலாயுதம்பாளையம் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் புகழூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சார்ந்த தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ உதவிகளை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை பயன்பாட்டிற்காக, 57,000 ரூபாய்- மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை, இ.எஸ்.ஐ., மருத்துவ அலுவலர் பானுமதியிடம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !