மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
குளித்தலை, குளித்தலை அடுத்த, ஆர். டி.மலை பஸ் நிறுத்தம் மற்றும் கடை வீதியில், 60 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த, 15 நாட்களுக்கும் மேலாக தனக்குத் தானே பேசிக்கொண்டும், திடீரென கடைகளில் நுழைவதும், சாலையில் பாதுகாப்பு இல்லாமலும் சுற்றித்திரிந்து வந்துள்ளார்.முன்னாள் யூனியன் கவுன்சிலர் சின்னையன், அப்பெண்ணின் பாதுகாப்பு கருதி, தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் ஆகியோரை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை மீட்டு சாந்திவனம் மனநலக் காப்பகத்தில் அனுமதிக்க கேட்டுக் கொண்டார்.இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்டு, சாந்திவனத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டுமென இயக்குனர் அரசப்பனிடம் கேட்டுக்கொண்டார்.சாந்திவனம் மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் மருதாம்பாள் மற்றும் ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு, திருச்சி தில்லை நகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக சேர்த்தனர்.