உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூ.7.95 கோடியில் திட்டப்பணி அமைச்சர் தொடங்கி வைப்பு

ரூ.7.95 கோடியில் திட்டப்பணி அமைச்சர் தொடங்கி வைப்பு

கரூர்: கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 7.95 கோடி ரூபாய் வளர்ச்சி திட்-டப்பணிகளை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, நெரூர் வடக்கு, தெற்கு, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஆகிய பஞ்சாயத்தில், 23 புதிய திட்டப்பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்-கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பா-லாஜி, நெரூர் வடக்கு பஞ்., ஒத்தக்கடை அருந்ததியர் கால-னியில், 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார். மேலும், மின்னாம்பள்ளி பஞ்சமா-தேவியில், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி.அம்பலக்கவுண்டன் புதுார் காலனியில், 12.50 லட்சம் ரூபாய் மதிப்பில் மினி சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, சின்ன காளி-பாளையத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பைப் லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி.மரவாபாளையத்தில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பேவர் பிளாக் அமைக்கும் பணி, அரங்கநாதன் பேட்டை பழைய பள்ளி வளாகத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் அமைக்கும் பணி என, மொத்தம், 7.95 கோடி ரூபாய் மதிப்பீட்டி-லான, 23 திட்டப்பணிகள் தொடங்கிவைத்தார்.டி.ஆர்.ஓ., கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், தி.மு.க., கரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்-பாளர் முத்துக்குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை