நடமாடும் மருத்துவ முகாம் 3,914 பேருக்கு சிகிச்சை
கரூர், புகழூர், டி.என்.பி.எல்., நிறுவனம் நடத்தும் மருத்துவ முகாமில், 3,914 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.புகழூர், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின், சமுதாய நலப்பணி திட்டத்தின் கீழ், நடமாடும் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. காகித ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடக்கிறது. 50-வது கிராமமான பொன்னியாக்கவுண்டன்புதுாரில், மருத்துவ முகாமானது நிறைவு பெற்றது. இங்கு, 931 பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், தேவைப்பட்டோருக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதுவரை, 3,914 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.