மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
11-Sep-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நாட்டுநலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.தலைமை ஆசிரியர் சாமியப்பன் தலைமை வகித்தார். தமிழ் ஆசிரியர் கவிஞர் கருப்பண்ணன், உதவி தலைமை ஆசிரியர் விசாலாட்சி, முதுகலை ஆசிரியர் பெரியசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை ஆகியோர், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.தலைமை ஆசிரியர் சாமியப்பன் பேசுகையில்,'' நாட்டு நலப்பணிகள் திட்டம் என்பது, இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் மூலம், 1969 செப்.,24ல் தொடங்கப்பட்டது. நாட்டு நலப்பணி திட்டம், ஜனநாயக வாழ்க்கை முறையின் சாராம்சத்தை வெளிப்படுத்துவதோடு, தன்னலமற்ற சேவையின் தேவையை வலியுறுத்தி வருகிறது. சமூக சேவை மூலம் ஆளுமையை வளர்ப்பதே திட்டத்தின் நோக்கம்,'' என்றார்.பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
11-Sep-2025