உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நவராத்திரி விழா; கோவில்களில் உற்சவ சிலைகளுக்கு அலங்காரம்

நவராத்திரி விழா; கோவில்களில் உற்சவ சிலைகளுக்கு அலங்காரம்

கரூர்: நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ விழா, நேற்று முன்தினம் தொடங்கியது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் ஸ்ரீ முருகன் வேடத்தில், நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு, சிறப்பு பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரியையொட்டி கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ